ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு- கேப்டனாக ரகானே நியமனம்

 

 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி, அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் ரகானே தலைமையிலான அணியில், தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கருண் நாயர், சகா, அஸ்வின்,  ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, சர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Posts