ஆப்கானிஸ்தானின் ஹரட் நகரை தாக்கிய வெள்ளப் பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். நுாற்றுக்கு மேற்பட்டோர் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹரட் மாகாணத்தை 2 வாரங்களாக கன மழை கொட்டி வருகிறது. குடியிருப்புகள் கொண்ட தாழ்வான பகுதியளில் வெள்ளம் நிறைந்து நுாற்றுக்கு மேற்பட்ட வீடுகளை மூழ்கடித்துள்ளன.

இதனால் அந்த மாகாணத்தை விட்டு இது வரை 100 குடும்பங்கள் வெளியேறி சென்றுள்ளன. மண்ணால் கட்டப்பட்ட வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகி உள்ளனர். தற்போது மழை குறைந்துள்ள நிலையில் சகதிக்குள் இருந்து தங்கள் உடமைகளை திரும்ப எடுக்கும் பணியில் மக்கள் இறங்கி உள்ளனர்.

Related Posts