ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு பொதுக்கூட்டத்தில் அவர் பேசத் தொடங்கியபோது, பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.  இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 30-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Posts