ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய 2 குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிற உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அங்குள்ள நங்கர்ஹார் மாகாணம் 2015-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் நகரில் நேற்று அடுத்தடுத்து 2குண்டு வெடிப்புகளை பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த குண்டுவெடிப்புகளால் ஜலாலாபாத் நகரம் அதிர்ந்தது. இவற்றில் சிக்கி 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சுகளில் அனுப்பி வைத்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை

Related Posts