ஆப்கானிஸ்தானில் 100 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதையடுத்து பயங்கரவாதிகளை அழிக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் காவல்துறைக்கு அதிபர் அஷ்ரப் கனி உத்தரவிட்டார். இந்நிலையில், நாட்டின் வடமேற்கில் பட்கிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டுப்படைகள் நடத்திய 48 மணி நேர தேடுதல் வேட்டையில் சுமார் 100 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 35 பயங்கரவாதிகள் காயமடைந்ததாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. . மேலும் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 ராணுவ வீரர்கள், 4 காவல்படை வீர்ர்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாகவும் 34 பேர் காயமடைந்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Posts