ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்புக்கு இந்தியா கண்டனம்

ஆப்கானிஸ்தானின் காபுலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் காபுல் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என 65 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். சுமார்180-க்கும் மேற்படோர் படுகாயமடைந்தனர். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Posts