ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கைகடிகாரத்தை அணிய கிரிக்கெட் வீரர்களுக்கு தடை

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கைகடிகாரத்தை அணிய, கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

பாகிஸ்தான் : மே-25

கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்குள் செல்போன், வாக்கி டாக்கி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கைகளில் ஆப்பிள் வாட்ச்-சை கட்டியிருந்தனர். இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் வாட்ச்-சை அணிய பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதித்தனர். ஆப்பிள் வாட்ச் மூலம் தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும் என்பதால், இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts