ஆம்பூரில்  13புள்ளி 60 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள்  ரவிச்சந்திரன் மற்றும் அன்பழகன் ஆகியோர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருவர் அதிகாரிகளை கண்டதும் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர்.  இதனை தொடர்ந்து அந்தப் பையை கைப்பற்றிய பறக்கும் படை அதிகாரிகள் அதை ஆய்வு செய்தபோது அதில் 13புள்ளி 60 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Posts