ஆம்பூர் அருகே ஏற்பட்ட விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் பலி

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற் உறுப்பினரும், திருப்பத்தூர் நகர அமமுக செயலாளருமாக இருந்த சுந்தரவேல் இன்று ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரவேல், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் கார் ஓட்டுனர் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இட்த்திற்கு வந்த மீட்பு பணியில் ஈடுப்பட்ட காவல்துறையினர் இவ்விபத்து குறித்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.

1991ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தரவேல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் காரில் இருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த குமரன் மற்றும் கார் ஓட்டுனர் கிருஷ்ணன் ஆகியோர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Posts