ஆம் ஆத்மியுடனான பேச்சுவார்த்தை தோல்வி : டெல்லியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

மக்களைத் தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, டெல்லியில் தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக, ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில் டெல்லியில் மட்டும் கூட்டணி எனப் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் திடீரென பஞ்சாப்,  ஹரியாணா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மிக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.

இதையடுத்து டெல்லியில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்தது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தவுடன், ஹரியாணாவில் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதலாவின் பேரன் துஷ்யந்த் செளதாலா தொடங்கியுள்ள ஜனநாயக் ஜனதா கட்சியுடன்  கூட்டணி அமைத்துள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்தது. ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், ஜேஜேபி 7 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று ஆம் ஆத்மி கட்சியின் 
மூத்த தலைவர் கோபால் ராய் கூறினார்.

Related Posts