ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை மேகாலயா, அருணாச்சலபிரதேசத்தில் ரத்து செய்தது வரவேற்கத்தக்கது

ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை மேகாலயா, அருணாச்சலபிரதேசத்தில் ரத்து செய்தது வரவேற்கத்தக்கது என்று இரோம் சர்மிளா தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அருணாச்சலபிரதேசம் மற்றும் மேகாலயாவில் உள்ள 8 காவல் நிலையங்களில் ஆயுதப்படை சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறினார். இதேபோல், மணிப்பூரிலும் ஆயுதப்படை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய இரோம் சர்மிளா, இந்த சட்டத்தினால் பல்வேறு சட்டப் பிரச்சினைகளும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

Related Posts