ஆர்ச்சரின் அபார பந்து வீச்சு : சுருண்ட ஆஸ்திரேலிய

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் ஆர்ச்சரின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 5வது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சரின் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 ரன்கள் எடுத்துள்ளது.  78 ரன்கள் முன்னிலையுடன் அந்த அணி 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்கிறது.

Related Posts