ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் ராணுவத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆசை-கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் ராணுவத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆசைப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தளபதியை நியமிக்க முடிவெடுத்திருப்பது, ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்திற்கு  செல்லும் பல படிகளில் ஒன்று என விமர்சித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம்,  உச்சநீதிமன்றம், தகவல் அறியும் உரிமை அமைப்பு, சிபிஐ இவைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பாரதிய ஜனதாவும், ஆர் எஸ் எஸ்-சும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

பால் விலை உயர்வு பற்றி கருத்து தெரிவித்த அவர், உற்பத்தியாளர்கள், ஏழை மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு மானியம் கொடுத்து ஒரு மாற்றத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமது கல்லூரி மீதான புகார் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தீரர் சத்தியமூர்த்தி மற்றும் ஜி.கே. மூப்பனார் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் அவர்களது திருவுருவப் படத்திற்கு அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல், சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கும் அழகிரி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Posts