ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவர்கள்  பணியாளர்கள் என  50-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.

அப்பல்லோ மருத்துவர்களின் சாட்சியம் தவறாக பதிவு செய்யப்படுவதால், ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி,   அப்பல்லோ நிர்வாகம் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தது..  அந்த வழக்கு இன்று  விசாரணைக்கு  வந்தது.  அப்போது, ஆறுமுகசாமி விசாரணை ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அப்பல்லோ நிர்வாகத்தின்  மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்கும் படி நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க   ஐஜி பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்ததை எதிர்த்து உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 66 போலீசார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பொன்.மாணிக்கவேல் விளம்பர நோக்கில் செயல்பட்டு வருவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த மனு மீதான வாத பிரதிவாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,காவல்துறை அதிகாரிகளின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Posts