ஆறுமுகசாமி விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு:   உச்ச நீதிமன்றம்

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும்   ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி  .

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்  தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்பல்லோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், பல்வேறு தகவல்களை மருத்துவர்கள் விசாரணை ஆணையத்திடம் அளித்த பிறகும், மீண்டும் மீண்டும் மருத்துவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவதாகவும், எனவே விசாரணை ஆணையத்தில் 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதுவரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.இந் நிலையில், இந்த தடை உத்தரவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனிடையே,  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலம் ஜூன் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து,  மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts