ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் திவாகரன் ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று ஆஜரானார்.

சென்னை : மே-03

கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக முதலில் கூறிய திவாகரன், பின்னர் மருத்துவ ரீதியாக மரணமடைந்து விட்டதை தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரனிடம் விசாரிக்க முடிவு செய்த விசாரணை ஆணையம், இன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியது. இதை அடுத்து அவர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்பது பற்றியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை, டிசம்பர் 4ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும் திவாகரனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts