ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி : தமிழிசை

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டவனுக்கும், ஆண்டு கொண்டிருப்பவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், தம் மீது நம்பிக்கை வைத்து பிரதமர் மோடி இந்த பொறுப்பை கொடுத்துள்ளதாகக் கூறினார்.

Related Posts