ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

 

மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-19 

சென்னை கொளத்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என கூறினார். ஆளுநர் நியமித்துள்ள விசாரணை குழுவால் உண்மை வெளிவராது என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

Related Posts