ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் கைது

 

 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்  உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, ஏப்ரல்-20 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை ஆளுநர் நியமித்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சூரப்பா நியமனத்தை ஆளுநர் திரும்பப்பெற வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணியில், விஜயகாந்த் காரில் அமர்ந்தபடியே கலந்துகொண்டார். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Related Posts