ஆவடியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 2அடுக்கு கட்டித்திற்கு சீல் வைப்பு

சென்னையை அடுத்த ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், செந்தில் நகரில்,  இரு தளங்களுடன் கட்டிடம் ஒன்று  கடந்த 6 மாத காலமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு ஆவடி நகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் திட்ட அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.  இதை அடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு கடந்த பிப்ரவரி  மாதம் 14ந்தேதி நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும் கட்டிடத்தின் உரிமையாளர்  அனுமதி கோரி எவ்வித விண்ணப்பமும் நகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் ஜோதிகுமார் உத்தரவின் பேரில் நேற்று நகராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், அண்ணனூர், மிட்டினமல்லி, கோவில்பாதாகை, முத்தாபுதுப்பேட்டை, பருத்திப்பட்டு உள்ளிட்ட இடங்களில் 250க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டு வருவதாகவும், இதற்கு உடனடியாக அனுமதியை பெற்று கொள்ளகட்டிட உரிமையாளர்கள் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

 

Related Posts