ஆவடி அருகே மின் இணப்புகள் வழங்ககோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆவடி அருகே மின் இணப்புகள் வழங்ககோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வெளிவட்ட சாலையான வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஆவடி பட்டாபிராம் அருகே சாஸ்திரி நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்றாக ஆவடியை அடுத்த ஜே.ஜே.நகரில்  நிலம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து வீடுகள் இழந்த  சுமார் 97 குடும்பங்கள் அங்கு வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். நிலம் வழங்கி 4 ஆண்டுகள் ஆகியும் மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.  இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கவுரி சங்கர் தலைமையில் ஆவடி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து கோரிக்கை மனுவை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் வழங்கினர்.

Related Posts