ஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமல்ஹாசனை விமர்சிக்கவே அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை பயன்படுத்தியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆவின் பாலகம் மட்டுமல்லாமல், ஆவின் இனிப்பகத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா முறையாக செய்யப்படுகிறது எனவும், இதனால், விவசாயிகள் அதிகளவு பாலை ஆவினுக்கு கொடுக்க முன் வருவதாகவும் தெரிவித்தார். தரமான பொருள் என்பதால்தான் வெளிநாட்டில் ஆவின் பால் விற்பனை சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பதாக கூறிய அமைச்சர், மாற்றுத்திறனாளிகள் தெய்வத்தின் குழந்தைகள் எனவும், அவர்களை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை எனவும் தெரிவித்தார். ஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கமல்ஹாசனை விமர்சிக்க அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரை பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts