ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு  விளையாடியது. இந்த சுற்றுப்பயணம் வெற்றி கரமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு1 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2க்கு1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. 20 ஓவர் தொடர் 1க்கு1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. நியூசிலாந்து பயணத்தில் ஒருநாள் தொடரை 4க்கு1 என்ற கணக்கில் முதல் முறையாக வென்ற இந்திய அணி 20 ஓவர் தொடரை 1க்கு2என்ற கணக்கில் இழந்தது. இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் போட்டி, மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் ஆட்டம் வரும் 24 மற்றும் 27-ந்தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூரில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ந் தேதிகளில்  முறையே  ஐதராபாத்,  நாக்பூர்,  ராஞ்சி,  மொகாலி,  டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி வீரர்களை தேர்வு செய்கிறது.

Related Posts