இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் நீக்கம்

நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 27-ந் தேதியில் இருந்து டிசம்பர் 3-ந் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து, ஐந்து 20 ஓவர் போட்டி, மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டுள்ளார். ஆனால் 20 ஓவர் போட்டிக்கான அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.  டெஸ்ட் அணியை பலப்படுத்துவதற்காக இந்த மாற்றத்தை இங்கிலாந்து தேர்வு குழு செய்துள்ளது.

4 புதுமுக வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Related Posts