இங்கிலாந்து அமெரிக்கா துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் நாளை சுற்றுப் பயணம்

வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை பெற இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பயணம் மேற்கொள்கிறார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டார்களிடம் இருந்து முதலீடுகளை பெற முதலமைச்சர் பழனிசாமி, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நாளை சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர், முதலில் லண்டன் செல்கிறார். இதனையடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு 2-ஆம் தேதி நியூயார்க் செல்கிறார். செப்டம்பர் 8 மற்றும்  9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகிறார். இதனையடுத்து செப்டம்பர் 10-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் தமிழகம் திரும்ப உள்ளார்.

Related Posts