இசை மற்றும் கவின் கலைப்பல்கலைக்கழகத்துக்கு பெயர் மற்றும்

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப்பல்கலைக்கழகத்துக்கு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை  சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ளார். அந்த  அறிவிப்பில், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தை தொடங்குவதற்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் 14-இல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஆணையரகத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயரை தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்து உத்தரவிடப்படுவதாகவும் அந்த அறிவிப்பில், அபூர்வ வர்மா குறிப்பிட்டுள்ளார்.

Related Posts