இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளில் அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. விக்ரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி களமிறக்கப்பட்டுள்ளார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விக்கிரவாண்டியில் எம்.முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் போட்டியிடுவார்கள் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இவர்களில் முத்தமிழ்ச்செல்வன் விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியச் செயலாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக இருக்கிறார்.

Related Posts