இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்

நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் களமிறங்கி உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30ம் தேதி தான் கடைசி நாள் என்பதால், திமுக வேட்பாளர்களும் அதற்கு முன்பே, வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, அக்டோபர் 1ம் தேதியும், திரும்ப பெற, அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  எனவே, அக்டோபர் 3ம் தேதி மாலையில், இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.. இதனிடையே, இடைத்தேர்தல் நடைபெறு விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

Related Posts