இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

இந்த இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி முதல் நாளை வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 5 நாட்களில் மொத்தம் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாங்குநேரியில் 12 பேரும், விக்கிரவாண்டியில்  6 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியிலும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில், அதிமுக வேட்பாளர்கள் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதியிலும் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர். நாளை கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளுடன் சேர்த்து சுயேட்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். நாளை மாலை 3 மணியுடன் மனு தாக்கல் முடிவடையும். இதையடுத்து, நாளை மறுதினம் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுவை வாபஸ் பெற அக்டோபர் 3ம் தேதி மாலை 3 மணி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.

 

Related Posts