இடைத்தேர்தல்கள் அதிமுகவிற்கு சவால் இல்லை

இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களும் அதிமுகவிற்கு சவால் இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கேரளா செல்லும் முன் சென்னை விமான நிலையித்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நீர்ப் பங்கீடு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பேச கேரளா செல்வதாக அவர் குறிப்பிட்டார். இதனால் தமிழகம்- கேரளா இடையேயான  நீர்ப் பங்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே திருவனந்தபுரம் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அம்மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். கிழக்கு துறைமுகச் சாலையில் உள்ள ஹோட்டல் மஸ்கட்டில்இ கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 3 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை செயலாளர் கே.மணிவாசன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

Related Posts