இடைத்தேர்தல் தொகுதிகளில் தொடங்கும் பிரசாரம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தியையும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து மு.க.ஸ்டாலின் 10 நாட்களுக்கு, 2 கட்டங்களாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, அக்டோபர் மாதம் 3, 4-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும், அதைத்தொடர்ந்து, 5, 6-ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பின்னர் அக்டோபர் 12, 13, 14-ந் தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும்,  அக்டோபர் 17, 18, 19-ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் 2-ம் கட்ட  பிரசாரம் செய்கிறார்.

Related Posts