இண்டிகோ விமானம் கோளாறு : உயிர் தப்பிய 146 பயணிகள்

சென்னையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் 146 பயணிகள் உயிர் தப்பினர்.

கத்தார் நாட்டு தலைநகா் தோகா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை ஒரு மணிக்கு சென்னை  சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானத்தில் 139 பயணிகள், 7 விமான ஊழியா்கள் உட்பட 146 போ் இருந்தனா். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து விமானி  சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.இதையடுத்து விமானம் அதிகாலை 1.50 மணிக்கு அவசரமாக தரையிறங்கியது.விமானத்திலிருந்த 146 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினா். இதையடுத்து காலை 6 மணிக்கு ஹைதராபாத் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் செல்ல மாற்று ஏற்பாட்டை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

 

 

Related Posts