இது முதலமைச்சரின் தூண்டுதல் : வைகோ குற்றம்சாட்டு

முதலமைச்சரின் தூண்டுதலின் பேரிலேயே தங்களது கட்சி மாவட்ட செயலாளரை போலீஸ் கைது செய்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளையொட்டி கட்சி தலைமையகமான தாயகத்தில் பெரியார் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியை பொய்ப்புகாரின் பேரில், முதலமைச்சரின் தூண்டுதலால் போலீஸ் கைது செய்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். கொடியில் கைவைத்தால் தொண்டர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும் என்று கூறிய அவர், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யும் அளவுக்கு சுப்பிரமணி செய்த தவறு என்ன என்று வினவினார்.

முன்னதா, மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது கொலை முயற்சி, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்த போலீஸார் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Related Posts