இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அறிவிப்பு

சிரியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெற்கு சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றியது. பின்னர்ஈராக்கிற்குள் நுழைந்த இந்த அமைப்பு அங்கு இரண்டு முக்கிய நகரங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனையடுத்து ஐஎஸ் அமைப்பு ஓரளவு ஒடுக்கப்பட்டு பெருவாரியான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து இவர்கள் உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை ஏற்படுத்தும் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில்  சில நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் உயிரிழந்த பயங்கரவாதி ஐ.எஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவன் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பின் செய்தி இணையதளமான அமாக் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதற்கு  ‘ஹிந்த் இன் வாலே’ என்று அரபு மொழியில் பெயரிடப்பட்டிருப்பதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஐ.எஸ். அமைப்பு, தற்போது இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts