இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை, அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

Want create site? Find Free WordPress Themes and plugins.

கடந்த புதன்கிழமை  நடந்த சோதனை மூலம்  ஆபத்து ஏற்படுத்தும்  செயற்கைகோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா தற்போது இடம் பிடித்துவிட்டது. புவி வட்டப்பாதையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கும் செயற்கைகோளை குறிபார்த்து சுட்டு வீழ்த்துவது என்பது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த ஒரு தோட்டாவை 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மற்றொரு தோட்டாவால் சுட்டு நாசமாக்கும் திறனுக்குச் சமம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே தற்போது இத்தகைய வல்லமையைப் பெற்றுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையைப் பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது. 20 முதல்22 கிலோ மீட்டர் உயரம் வரையில் உள்ள புவிமண்டலத்துக்கு உட்பட்ட தூரத்திலோ, புவி மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளையோ இந்த ஏவுகணையால் தாக்க முடியும். ஆனால் இந்த செயற்கை ஏவுகணை சோதனை மூலம் விண்வெளியில் உருவாகும் குப்பைகள் மற்ற செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக  இருக்கும் என கூறப்பட்டது. தற்போது இந்த சோதனை மூலம் உருவாகி உள்ள குப்பைகளால் சர்வதேச விண்வெளி நிலைபாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன்  நாசா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, விண்வெளியில் தங்களின் செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக, இந்தியா ஏ-சாட் எனும் ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை தாக்கி அழித்து நடத்திய சோதனை உண்மையில் பயங்கரமானது என்றும் ஏவுகணை அழித்த செயற்கைக்கோளின் உடைந்த 400பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாகச் சிதறிக்கிடப்பதாகவும் தெரிவித்தார்.  இதுவரை 60பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். விண்வெளியில் உள்ள சூழல் குறித்து அறிந்து, நாடுகள் பொறுப்புடனும், விண்வெளி போக்குவரத்து மேலாண்மை குறித்தும் அறிந்து நடக்க வேண்டும் என  பிரிடென்ஸ்டைன் தெரிவித்தார். இந்த நிலையில்,நாசாவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரோ பதிலளித்துள்ளது. இஸ்ரோ தலைவரின் மூத்த ஆலோசகர் தபன் பேசுகையில் மத்திய பாதுகாப்புத் துறையின் டி.ஆர்.டி.ஒ நடத்திய இந்தச் சோதனை ஒரு வெடிப்பு கிடையாது எனவும். அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்தியாவுக்கு எந்த விதத்திலும் அவமானம் நேரும் வகையில் இது செய்யப்படவில்லை எனவும், விண்வெளியில் ஏற்கெனவே குப்பைகள் இருப்பதாகவும் அவர் கூறினார். சிதறிக் கிடக்கும் பாகங்களின் மீது செயற்கைக்கோள் மோதும் சூழல் உருவானால், செயற்கைக்கோளின் திசையை மாற்றிவிட முடியும் எனவும், . விண்வெளியில் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியா எப்போதும் செயல்பட்டது கிடையாது” எனவும் அவர் தெரிவித்தார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts