இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு : அதிர்ச்சி தகவல் வெளியிடு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு அமைப்பு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், Armed Conflict Location and Event Data என்ற புலனாய்வு அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

அதில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளில், செயல்பட்டு வந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அழுத்தம் காரணமாக அங்கு இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிய நாடுகளில் தீவிரமாக செயல்பட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில், ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, இந்தியா, ஆஃப்கானிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, மாலி, லிபியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ். அமைப்பு வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts