‘இந்தியாவின் ஜுராசிக் பார்க்’ எங்கு உள்ளது தெரியுமா?

உலகின் பல்வேறு இடங்களில் டைனோசர் படிமங்கள் காணப்படுகின்றன, இதேபோல் இந்தியாவிலும் டைனோசர் படிமங்கள் காணப்படுகின்றன. ”இந்தியால எங்கப்பா டைனோசர்” என நீங்கள் குழப்பமாய் கேட்டல் உங்களுக்கு ‘இந்தியாவின் ஜுராசிக் பார்க்’ பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆம் குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே அமைத்துள்ள “இந்திரோடா டைனோசர் மற்றும் படிம பூங்கா” தான் ‘இந்தியாவின் ஜுராசிக் பார்க்’ என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் டைனோசர் படிமங்கள் காணப்படும் சில இடங்களுள் குஜராத் மாநிலமும் முக்கிய இடம் வகிக்கிறது இதற்கு மிகப்பெரிய சான்றாக விளங்குகிறது “இந்திரோடா டைனோசர் மற்றும் படிம பூங்கா”

Related Posts