இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்யஸ்ரீ சர்மிளா பொறுப்பேற்பு

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ சர்மிளா பொறுப்பேற்றுள்ளார்.

ராமநாதபுரம் : ஜூன்-30

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் அங்கீகாரம் அளித்து வருகிறது. அரசின் சில முக்கியத் துறைகளில் திருநங்கைகள் கால்பதித்து வருகின்றனர்.அந்தவகையில்,  இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ சர்மிளா இன்று பொறுப்பேற்றார். வருக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞராக அங்கீகாரம் அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யஸ்ரீ சர்மிளா, இந்த அங்கீகாரம் திருநங்கை சமுதாயத்திற்கு கிடைத்த பெருமை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Posts