இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சூடும் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா பங்கேற்றார். இறுதிச்சுற்றில் 244 புள்ளிகள் பெற்று அவர் தங்க பதக்கம் பெற்றார். அதே போல், இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான சவுரப் சவுத்ரி, 221 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இவர்களில் அபிஷேக் வர்மாவும், சவுரப் சவுத்ரியும் தேர்வாகியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏஷியன் கேம்ஸ் போட்டியில் அபிஷேக் வர்மா வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடதக்கது.

Related Posts