இந்தியாவிற்கு 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

Want create site? Find Free WordPress Themes and plugins.


அமெரிக்காவிடம் இருந்து 14 கோடி ரூபாய் செலவில் 24 ‘ரோமியோ’ ரக ஹெலிகாப்டர்களை கடந்த ஆண்டு வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. நீர் மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் ‘ரோமியோ’ ரக ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.. இந்த ரோமியோ ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது. சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இந்தியாவிற்கு தற்போது 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. ரோமியோ ஹெலிகாப்டர்கள் கடலில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளிலும், அவசர காலங்களில் கப்பலுடன் இணைத்து பயன்படுத்தவும் உதவும்.  மேலும் பிரிட்டனின் பழைய கடல் கிங் ஹெலிகாப்டர்களில் இல்லாத புதிய நுட்பங்கள் பல இவற்றில் உள்ளன. அவற்றிற்கு மாற்றாக இந்த ரோமியோ ஹெலிகாப்டர்கள் உபயோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts