இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழகம் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது

சுகாதாரத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக திகழ்வதாக என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனை பல்கலைகழகத்தில் சிறந்த மருத்துவர்களுக்கான விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஷீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மருத்துவத்துறையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 500 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர்களுக்கான விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரத்துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.

Related Posts