இந்தியாவில் அவசர நிலையை அறிவித்து இருண்ட காலத்தை உருவாக்கியவர் இந்திரா காந்தி

இந்தியாவில் அவசர நிலையை அறிவித்து இருண்ட காலத்தை உருவாக்கியவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மும்பை : ஜூன்-26

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1975ம் ஆண்டு, ஜுன் 25-ம் தேதி அவசரநிலையை நாட்டில் கொண்டுவந்தார். இந்த அவசரநிலை ஏறக்குறைய 2 ஆண்டுகள் வரை அமலில் இருந்தது. அந்த சமயத்தில் பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டு, கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசை விமர்சிப்பவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், எமர்ஜென்சி கொண்டுவரப்பட்ட தினத்தை, பாஜகவினர் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்காக காங்கிரஸ் கட்சி அவசரநிலை என்ற பாவத்தை செய்ததாக குற்றம்சாட்டினார். இந்திய ஜனநாயகத்தில் அவசரநிலை, ஒரு கரும்புள்ளி எனக்கூறிய பிரதமர் மோடி, அரசியலமைப்புச் சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தவறாக பயன்படுத்தியதாக சாடினார்.

Related Posts