இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிதிக்க முடிவு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிதிக்க முடிவெடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா : ஜூன்-27

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்திருப்பது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுபோன்ற நடவடிக்கைகளை இந்தியா கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  ஐரோப்பிய யூனியன், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் மிகமுக்கியமான வர்த்தக கூட்டாளிகள் என்றும், இவர்களுடனான வர்த்தக உறவில் தற்போது சீரற்ற சூழல் நிலவுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதனைச் சரிசெய்வதற்கான பதிலடி நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்தியா உட்பட, பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரிவிதிக்க முடிவு செய்திருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அண்மையில், கனடாவில் நடைபெற்ற ஜி 7 நாடுகள் மாநாட்டில் இந்த விவகாரம் குறித்து தெரிவித்த கருத்துகளை நினைவுபடுத்திய ட்ரம்ப், அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை மற்ற நாடுகள் ரத்து செய்தால், தாங்களும் அதேபோலச் செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Posts