இந்தியாவில் காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்காது : வைகோ

இந்தியாவில் காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்காது என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கருத்தரங்கம் மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராசன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லைசத்யா,  திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அணுசக்திக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த சுப.உதயகுமார், கே.பாலகிருஷ்ணன், டி.எம். மூர்த்தி, கே. நவாஸ்கனி,  தி. வேல்முருகன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, தெஹ்லான் பாகவி, திருமுருகன்காந்தி, கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய வைகோ, இந்தியாவில் காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்காது எனவும் தற்போது அமைதியாக இருக்கிறது, ஆனால் போராட்டம் வெடிக்கும் எனவும் இது தன்னுடைய கணிப்பு என்று தெரிவித்தார்.

கருத்தரங்கின் இறுதியில் `பண்டோரா’ எனும் தென்கொரியத் திரைப்படம் திரையிடப்பட்டது. அணு சக்திக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் தென்கொரிய இயக்குநரான பார்க் ஜியோங்-வூ (Park Jeong-woo). கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதிலும் பலரது கவனத்தையும் ஈர்த்தது

Related Posts