சாக்கடை சுத்திகரிப்பில் ஈடுப்பட்டுள்ள பாபா அணு ஆராய்ச்சி

இந்தியாவில் முதல் முறையாக சாக்கடையை சுத்திகரிக்கும் திட்டத்தை பாபா அணு ஆராய்ச்சி மையத்தோடு சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி இணைந்து தொடங்கியுள்ளது என்று பாபா அணு ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி ஜே. டேனியல் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வில்லிவாக்கத்தில் உள்ள  ஏரியை தூர் வாரும் பணியை மேற்கொண்டிருப்பதாகவும், ஏரியில் மீன்கள் வளர்ப்பதோடு பசுமை பூங்காவாக மாற்றும் முயற்சியும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பாபா ஆராய்ச்சி தொழில் நுட்பத்தின் மூலமாக சாக்கடை நீரை சுத்தப்படுத்தி மீண்டும் ஏரியில் விடுவதனால் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கான தொழில்நுட்பத்தை சென்னை மாநகராட்சியோடு தொடங்கி உள்ளதாக கூறினார்.

Related Posts