இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் காரான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மின்சாரக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் காரான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மின்சாரக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், மின்சாரக் கார் உற்பத்திக்காக தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாயை ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில், கோனா என்ற மின்சாரக் காரின் உற்பத்தி தொடங்கியது.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் கார் என்ற பெருமையுடன் தற்போது  கோனா களத்தில்    இறங்கியுள்ளது. இந்தக் காரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகம் செய்து வைத்தார். கோனா மின்சாரக் காரின் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த அவர், பின்னர் காரில் பயணித்தார்.அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் காரில் பயணம் செய்தார்.

இந்தக் காருக்கு கோனா என பெயர் சூட்டப்பட்டதற்கான காரணத்தையும் ஹூண்டாய் நிறுவனம் விளக்கி உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவின் ஒரு பகுதி தான் கோனா என்றும்அங்கு வசிக்கும் மக்கள்சாகசப் பிரியர்கள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள் என்பதால் அவர்களை கவுரவிக்கும் விதமாகவே கோனா என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் அந்நிறுவனம்தெரிவித்துள்ளது

Related Posts