இந்தியாவில் வணிகம் செய்ய ஏற்ற சூழல் ஏற்பட்டுவுள்ளது : உலக வங்கி

தொழில் தொடங்க ஏற்ற 20 நாடுகளில், இந்தியாவும் இடம்பிடித்து உள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.

சில ஆண்டுகளாக பொருளாதாரத்தில் செய்த சீர்திருத்தங்களால் சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள் இந்தியா‌வில் தொழில் தொடங்க முனைப்பு காட்டி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக தொழில் தொடங்க ஒற்றை சாளர அனுமதி முறை அமலில் உள்ளதால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது. தொழில் தொடங்குதல், திவால் பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், நாட்டின் மூலை முடுக்கிலும் வணிகம் செய்ய ஏற்ற சூழல், கட்டுமானத்திற்கான அனுமதி போன்ற காரணிகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொழில் தொடங்க உகந்த சூழல் உள்ள நாடுகளின் தரநிலை அடுத்த மாதம் 24 ஆம் தேதி உலக வங்கியால் வெளியிடப்படவுள்ளது.

 

Related Posts