இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அந்நிறுவன் அறிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியை கடந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த எண்ணிக்கை இப்போது 40 கோடியை கடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயன்படுத்தும் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை 40 கோடியை கடந்ததாக வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை கடந்துவிடும் என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் தெரிவித்தார். இந்தியாவில் தற்சமயம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 45 கோடியாக உள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டில் இது 80 கோடியாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts