இந்தியாவில் 30 லட்சம் பேருந்துகள் தேவை

இந்தியாவில் 30 லட்சம் பேருந்துகள் தேவைப்படும் நிலையில், தற்போது 2 புள்ளி 8 லட்சம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பொது மக்கள் பயணம் செய்ய 30 லட்சம் பேருந்துகள் தேவைப்படுகிறது. ஆனால், நாட்டில் 19 லட்சம் பேருந்துகள் இருந்தாலும், அதில் மாநில அரசின் கீழ் அல்லது மாநில அரசின் அனுமதி பெற்று 2 புள்ளி 8 லட்சம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், சீனாவில் ஆயிரம் பேருக்கு 6 பேருந்துகள் என்ற விகிதத்தில் உள்ளதாகவும், ஆனால்,இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு நான்கு பேருந்துகள் என்ற விகிதத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் 90 சதவீதம் பேரிடம் சொந்த வாகனங்கள் இல்லை எனவும், போக்குவரத்தை மேம்படுத்த லண்டனில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து முறையை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Posts