இந்தியாவில் 343 மருந்துகளை தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை

 

இந்தியாவில் உற்பத்தியாகும் 343 கலவை மருந்துகளை தடை செய்ய மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், மொத்தம் 349 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதில் சளி, இருமல் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள், மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது ஒரு துணைக்குழுவை அமைத்து 349 மருந்துகளுக்கான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஆய்வு செய்து மருத்துவ தொழில்நுட்ப குழு ஏற்கனவே தடை செய்யப்பட்ட 349 வகையான மருந்துகளில் 6 மருந்துகள் தவிர 343 மருந்துகளை தடை செய்யலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இதில் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் பிரபலமான மருந்துகளும் இடம் பெற்றுள்ளன. இதனை அகில இந்திய மருந்து நடவடிக்கை குழு அமைப்பின் இணை அமைப்பாளர் எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Related Posts